ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பிரதான தயாரிப்புகளில் ஒன்றான போர்ட் டைல் என்ற கார் வகையே இது. உலகிற்கே இந்த மொடலில் வெறும் 03 கார்களை மட்டும்தான் ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்தது.
மூன்று நிறங்களில் மூன்று கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் அதில் நீல நிற கார் ஒன்று துபாய் பால்ம் ஜூமைரா வீதிகளில் உலா வருகின்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.
இந்த ஒரு காரின் விலை 28 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் இலங்கை ரூபா அடிப்படையில் ஒரு காரின் விலை 918 கோடி ரூபா எனவும் கூறப்படுகின்றது.
இந்த கார்களை வாங்கியவர்கள் யார் யார் என்று அறிவிக்கப்படாவிட்டாலும் துபாயில் இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
பொதுவாக அதி சொகுசு வாகனங்களை மத்திய கிழக்கு பணக்காரர்கள்தான் முதலில் வாங்குகின்றனர் என்ற கருத்து மீண்டும் உறுதியாகியுள்ளது.