இதனை கணக்கிடுவதற்காக இத்தாலியில் 1961 ஆம் ஆண்டு முதல் பதிவுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பணியை இத்தாலியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொள்கிறது.
அதன்படி தற்போது 2022-ல் இத்தாலியின் காலநிலை' என்ற தலைப்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆய்வு முடிவில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2022-ல் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இதன்மூலம் மிகவும் வெப்பமான மற்றும் வறட்சியான ஆண்டு என்ற நிலையை 2022 எட்டியுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் அங்கு விவசாய துறை பெருமளவில் பாதிக்கும் என கூறப்படுகிறது.