Our Feeds


Wednesday, July 26, 2023

SHAHNI RAMEES

13 ஐ தமிழ் எம்.பிக்களுடன் மாத்திரம் பேச முடியாது - சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி

 

தேசிய நல்லிணக்கம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு அறிவிக்கும் சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

 

அந்த வகையில் குறித்த கூட்டத்தில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கயைில்,

 

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளின் எம்.பி.க்களுடன் மட்டும் கலந்துரையாடுவது போதுமானதல்ல என்றும் இது நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »