இந்நிலையில் வடகிழக்கு சீனாவில் கிகிஹார் நகரில் உள்ள நடுநிலைப் பாடசாலை உடற்பயிற்சி கூடத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
உடற்பயிற்சி கூடத்தின் கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் போது 19 பேர் உள்ளே இருந்ததாகவும், அதில் 4 பேர் தப்பிய நிலையில் 15 பேர் உள்ளே சிக்கிக் கொண்டதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மழைநீரை உறிஞ்சும் வகையில் பெர்லைட் என்ற கனிமப் கட்டுமானப் பொருளை கூரையின் மீது குவிக்கப்பட்டிருப்பது விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.