Our Feeds


Monday, July 24, 2023

SHAHNI RAMEES

பணிப்புறக்கணிப்பால் 11 அலுவலக ரயில்கள் இரத்து

 

புகையிரத எஞ்சின் சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக ஒருசில அலுவலக புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

புகையிரத எஞ்சின் சாரதிகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாகவே இவ்வாறு அலுவலக புகயிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

மேலும், இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக ஏனைய புகையிரத போக்குவரத்தில் காலதாமதம் ஏற்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 



இந்த தொழிற்சங்க நடவடிக்கையானது நேற்று (23) மாலை ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் காரணமாக கொழும்பிலிருந்து தூர பிரதேசங்களுக்கு பயணிக்க இருந்த ஒருசில புகையிரதங்களும் நேற்று மாலை இரத்து செய்யப்பட்டிருந்தன. 



எஞ்சின் சாரதிகளின் கடமை நேரத்தை ஒழுங்கமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »