சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற பிரபல அரபு யூடியுபர் காலித் அல்-அமரி இன்று இலங்கை வருவதாக அறிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் சமூக வலைதளங்களில் பிரபலமான காலித் அல்-அமரி இன்று முதல் 5ம் திகதி வரை இலங்கையில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அரபுலகில் மிகவும் புகழ்பெற்றவரான காலித் அல்-அம்ரியின் தற்போதைய இலங்கை வருகை இலங்கையின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.