கல்குடா பிரதேசத்தில் விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் பெயர்கள் அடங்கிய நினைவுத் தூபி ஒன்று நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஏவிஷன் நிறுவன ஏற்பாட்டில் நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகரும் அல்-கிம்மா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் மௌலவி ஹாருன் ஸஹ்வியின் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், இலங்கை இராணுவத்தின் வாகரை 33ம் படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கேர்னல் கமல் டி சில்வா, வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெமீல், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லஸன்த பண்டார, கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்திரகுமார உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பின் பல அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன், குறித்த நிகழ்வில் டைவர்ஸ் கல்குடா, அகீல் எமர்ஜன்ஸி சேவையின் தவிசாளர் அல்-ஹாஜ் நியாஸ் மற்றும் ஊர் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.