ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்தவாரம் கொழும்பில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், எதிர்வரும் 28ம் திகதி, ஜனாதிபதி செயலகத்தில், ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது.
அந்தக் கூட்டத்தில், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் வகையில், இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கொழும்பிலிருந்து வெளி இடங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.