சீர்குலைக்கும் செயல்கள் எதையும் செய்ய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அனுமதிக்காது. எனவே எதிர்க்கட்சிகள் உருவாக்கம் அரக்கர்களைக் கண்டு யாரும் பயப்பட வேண்டாம் என அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மக்கள் போலிப் பிரச்சாரங்களை நம்பி ஏமாறக் கூடாது என, அவரின் தந்தை மற்றும் மறைந்த அமைச்சருமான ரெஜ்ஜி ரணதுங்க அவர்களை நினைவுகூரும் நிகழ்வொன்றில் பேசிய போது அவர் தெரிவித்தார்.
“எதிர்க்கட்சியினர் தேர்தல் நடாத்தக் கோரி கூச்சலிடுகின்றனர். இப்போது தான் நாம் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புகின்றோம். இது தேர்தலுக்கான சரியான நேரம் இல்லை. அத்துடன் எந்த தேர்தலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
இன்று தேர்தல் நடந்தாலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறும். தேர்தலை எப்போது நடத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானிப்பார். எமக்கு ஜனாதியுடன் எந்த முரண்படும் இல்லை. நாங்கள் அவரைத் தொடர்ந்து ஆதரிப்போம்” என பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.