இலங்கையின் முன்னனி தமிழ் பத்திரிக்கையான ‘தமிழன்’ பத்திரிகையின் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி விசேட நிகழ்வுவொன்று கொழும்பு பம்பலபிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது.
லிபர்ட்டி பப்ளிஷர்ஸ் நிறுவன தலைவா் திலித் ஜயவீர தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், கல்வியலாளர்கள், ஊடகவியலாளர்கள், தமிழன் வாசகர்கள், நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கல்வி, தமிழ் மற்றும் கலைத்துறை ஆகியவற்றில் நெடுங்காலமாக சேவையாற்றிவரும் மூவருக்கு ‘தமிழன் விருது‘ வழங்கி கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் தமிழன் பத்திரிகையின் இந்த மூன்று ஆண்டு பயணம் மற்றும் பத்திரிகையின் சேவையைப் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
(படங்கள் - சமன் அபேசிறிவர்தன)