ஜாமிஆ நளீமிய்யாவின் பொன்விழா மற்றும் 11வது பட்டமளிப்பு விழா, நேற்று (24) கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கலாபீடத்தின் தலைவர் அல்ஹாஜ் யாக்கூத் நளீம் தலைமையில் நடைபெற்றது.
அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், உலமாக்கள் மற்றும் பெருந்தொகையான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான அங்கமாக பதிவானது.