அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளர் நாயகமாக எஸ். சுபைர்தீன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக செயற்பட்ட சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட் அவர்களின் மறவையொட்டியே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகார பீடத்தின் போதே இந்த தீர்மானம்எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
2022ம் வருடம், டிசம்பர் மாதம் இடம்பெற்ற கட்சியின் பேராளர் மாநாட்டின் போதே, வை.எல்.எஸ். கட்சியின்செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அதற்கு முன்னர் சுமார் 08 வருடங்களாக சுபைர்தீனே செயலாளராக கடமையாற்றியதும் குறிப்பிடத்தக்கது