இலங்கையின் பொருளாதார மீட்சி என்பது தொடர்ந்தும் சவாலான விடயமாகவே காணப்படுகின்றது என சர்வதேச நாணயநிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜிஒகமுரா தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி ஊடாக இலங்கை பயணிக்கும் போது நெருக்கடியால் அளவுக்கதிகமான விதத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் நலிவடைந்தவர்களை பாதுகாக்க வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
நுண் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துதல் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுத்தல் நிதி ஸ்திரதன்மையை பாதுகாத்தல் ஆட்சி முறையை வலுப்படுத்துதல் நலிவடைந்தவர்களை பாதுகாத்தல் ஆகியனவே பொருளாதார சீர்திருத்தத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்றத்திற்கான தற்காலிக அறிகுறிகளை காண்பிக்கின்றது என தெரிவித்துள்ள அவர் முக்கிய கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதன் காரணமாகவே இந்த நிலையேற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.