இத்தாலியின் லம்பெடுசா தீவில் புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்ததில் 37 பேர் காணாமல் போயுள்ளனர் என ஐ.நா. தகவல் வெளியிட்டுள்ளது.
துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸில் இருந்து புறப்பட்ட படகு, கேமரூன், புர்கினா பாசோ மற்றும் ஐவரி கோஸ்ட்டில் இருந்து 46 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு இத்தாலி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 37 பேர் மாயமாகியுள்ளனர். இதில் ஏழு பெண்களும் ஒரு பிறந்த குழந்தையும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிர் பிழைத்த நான்கு பேர் லம்பேடு என்ற பகுதி கரையை அடைந்தவர்கள் விபத்து குறித்த தகவலை மீட்புப் படையினருக்கு வழங்கியுள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றது.