Our Feeds


Saturday, June 10, 2023

Anonymous

டிரம்பின் ஜனாதிபதி கனவிற்கு மீண்டும் ஆபத்து – புதிய குற்றச்சாட்டுகளை சுமத்தியது நீதிமன்றம்

 



வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பின்னர் இரகசிய ஆவணங்களை கையாண்டவிதம் குறித்து  அமெரிக்க நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பின்னரும் தான் இரகசிய ஆவணங்களை வைத்திருந்ததாக டிரம்ப் தெரிவிக்கும் குரல் பதிவொன்று தங்களிற்கு கிடைத்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதவியிலிருந்து விலகி ஆறு மாதங்களின் பின்னர் 2021 ஜூலை மாதம் டிரம்பின் நியுயேர்சி கோல்ப்கிளப்பில் இடம்பெற்ற சந்திப்பில் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

சிஎன்என் இது குறித்த விபரங்களை முதலில் அம்பலப்படுத்தியிருந்தது பின்னர் இந்த விவகாரத்துடன் தொடர்புபட்டவர்கள் மூலம் பிபிசியும் அதனை உறுதி செய்திருந்தது. இதனடிப்படையிலேயே நீதிமன்றம் டிரம்பிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. டிரம்பிற்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு இது இடம்பெறும் என கருதவில்லை என குறிப்பிட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு கருப்புதினம் மிக வேகமாக பாரதூரமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்ற நாடாக நாங்கள் காணப்படுகின்றோம் மீண்டும் அதனை வலிமையானதாக்குவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »