ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகை மற்றும் கொழும்பு பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை 'புதிய கொழும்பு பாரம்பரிய நகர திட்டத்தின்' கீழ் சுற்றுலா தலங்களாக பாதுகாக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், தற்போதைய உத்தியோகபூர்வ ஜனாதிபதி மாளிகை மற்றும் செயலகம், பிரதமரின் இல்லம் மற்றும் அலுவலகம் ஆகியவை ஸ்ரீஜயவர்தனபுர கோட்டைக்கு மாற்றப்படவுள்ளன.
இதேவேளை, ஸ்ரீஜயவர்தனபுர - கோட்டை பகுதியில் உள்ள நிர்வாக வளாகத்தை ஒரு இடத்துக்கு மாற்றும் நோக்கில் மாற்றுக் காணிகள் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.