மொஸ்கோவிற்கும் ரொஸ்டொவ் ஒன் டொன் நகரிற்கும் இடையில் உள்ள வொரோனெஸ் நகரையும் வாக்னர் கூலிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
பிபிசி இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை வாக்னர் கூலிப்படைகளின் முன்னேற்றத்தை தடுப்பதற்காக அந்த நகரில் உள்ள எண்ணெய் சேமிப்பு குதமொன்றின் மீது ரஸ்ய ஹெலிக்கொப்டர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளன.
இதன் காரணமாக அந்த எண்ணெய் சேமிப்பு குதத்தில் பெரும்தீ மூண்டுள்ளது.
ரஸ்யாவின் அலிகேட்டர் என அழைக்கப்படும் காமோவ் கா ஹெலிக்கொப்டர்கள் தாக்குதலை மேற்கொள்வதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.