கிரிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ சமர்ப்பித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்யாமல் தள்ளுபடி செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெரோம் பெர்னாண்டோ தம்மைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி மனுவொன்றை சமர்பித்திருந்தார்.
அதற்கு எதிராக எல்லே குணவங்ச தேரர் உள்ளிட்டோரால் இந்த இடைக்கால மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பௌத்தம் உள்ளிட்ட பிற மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜெரோம் பெர்னாண்டோ, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.