Our Feeds


Saturday, June 24, 2023

SHAHNI RAMEES

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அமைச்சர் பிரசன்ன வெளியிட்ட அறிவிப்பு

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக களமிறங்குவாா் என அரசாங்கத்தில் உள்ள பலரும் எதிர்பார்த்து வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.



ரணில் விக்ரமசிங்க பதவிக்கு வந்தால் அவருக்கு ஆதரவளிப்பதில் பிரச்சினை இல்லை.



நாட்டில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாட்டு மக்களின் நலன் கருதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரசித்தம் அற்ற தீர்மானங்கள் பலவற்றை முன்னெடுத்திருந்தார்.



அதன் பலனாகவே நாடு தற்போது சுமூகமான நிலைமைக்கு மாறியுள்ளது.



கடந்த இரு வருடங்களுக்கு முன்பாக காணப்பட்டதை விடவும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடைந்துள்ளது என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »