கொழும்பிலுள்ள ஓமான் தூதுவராலயத்தின் ஏற்பாட்டிலான இரத்த தான நிகழ்வொன்று கடந்த 14ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு – 05 இலுள்ள தேசிய இரத்த வங்கியில் இடம்பெற்றது.
சர்வதேச இரத்த தான தினத்தினையொட்டியே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி ரசீட், தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஷ்மன் எதிரிசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஓமான் வெளிவிவகார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் உலகளாவிய ரீதியிலுள்ள அனைத்து ஓமான் தூதுவராலயங்களினாலும் மேற்கொள்ளப்படும் மனிதாபிமானப் பணியின் ஒரு அம்சமாகவே இந்த இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.