(எம்.வை.எம்.சியாம்)
ஊடகங்களை கையகப்படுத்தும் செயற்பாட்டுக்கும், மக்களின் கருத்து தெரிவிக்கும் உரிமைக்கு எதிராக ஊடக சுதந்திரத்தை இல்லாமல் செய்யும் செயற்பாட்டுக்கும் நாம் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
அவ்வாறு ஒன்றில்லை. சட்டத்தை நீக்கியுள்ளதாக ஜனாதிபதி கூறுவதை நாம் கண்டோம். அன்றைய விக்கிரமசிங்க இன்றில்லை.
ராஜபக்ஷக்களுடன் இணைந்து செயற்படும் ரணில் விக்கிரமசிங்கவே இன்றிருக்கிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (16) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஊடக ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பழங்குடி மக்கள் வாழ்ந்ததை போன்ற முறைமையொன்றை உருவாக்குவதற்காகவே ராஜபக்ஷ குழுக்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார்.
ஊடகங்களை கையகப்படுத்தும் செயற்பாட்டுக்கும், மக்களின் கருத்து தெரிவிக்கும் உரிமைக்கும் எதிராக, ஊடக சுதந்திரத்தை இல்லாமல் செய்யும் செயற்பாட்டுக்கும் நாம் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அவ்வாறு ஒன்றில்லை. சட்டத்தை நீக்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுவதை நாம் கண்டோம்.
அன்றைய விக்கிரமசிங்க இன்றில்லை என்றே நாம் கூறுகிறோம். ராஜபக்ஷக்களுடன் இணைந்து செயற்படும் ரணில் விக்கிரமசிங்கவே இன்றிருக்கிறார். தன்னை அவர் பெடரர் போன்று காட்டிக்கொண்டாலும் அவரது செயற்பாடுகள் அனைத்தும் வேறு விதமாகவே காணப்படுகிறது என்றார்.