பங்களாதேஷிடம் இருந்து பெற்ற 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை ஒகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதத்திற்குள் செலுத்துமென என இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
"ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத்தில் குறித்த கடனை செலுத்திவிடுவோம் என பங்ளாதேஷுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்” எனவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்யைில்,
நாட்டில் ஏற்பட்ட பொருளாதா நெருக்கடியை எதிர்கொள்வதற்கு 2021 ஆம் மே மாதத்தில் பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டொலரை கடனாகப் பெற்றது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நாடு கடனைத் திருப்பிச் செலுத்தத் திட்டமிடப்பட்டது, ஆனால் அதைச் செய்யத் தவறிவிட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரலில், இலங்கை தனது 51 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்று அறிவிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கை கடனை மார்ச் மாதத்திற்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.
ஆனால் நாடு இன்னும் அந்நிய செலாவணி இருப்புக்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கிறது, இதனால் பங்களாதேஷ் வங்கியிடம் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிக்கக் கோர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இந்நிலையில், பங்களாதேஷ் வங்கி தனது அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக குறைந்து வரும் நேரத்தில் காலக்கெடுவை நீட்டித்தது.
புதிய காலக்கெடுவின்படி, இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை கடனை திருப்பிச் செலுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.