பியகம பொலிஸ் நிலையத்தில் கான்ஸ்டபிள் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் கால், கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கடமை முடிந்து செல்லத் தயாராகி அவரது துப்பாக்கியை பெட்டகத்தில் வைத்த போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் மூன்று தோட்டாக்கள் வெளியேறி பாதுகாப்புப் பெட்டியைத் துளைத்து கணினி அறையில் இருந்த பொலிஸ் சார்ஜன்ட் மீது பட்டதில் அவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் குறித்த சார்ஜென்ட்டின் இடது கை மற்றும் இடது காலில் தாக்கியதாகவும், பாதுகாப்புப் பெட்டியும் சேதமடைந்துள்ளதாக மூத்த பொலிஸ் அஸ்ரீ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் காயமடைந்த சார்ஜென்ட் தனியார் வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.