உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் யோசனை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அரச உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அந்த அதிகாரி, இந்த வேட்புமனுக்கள் ஏற்பு அப்படியே இருப்பதால் வேட்புமனுத்தாக்கல் செய்த அரச சேவையில் இயங்கும் பணியாளர்கள் அதிக பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.