ப்ரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுள்ளார்.
இன்று அதிகாலை எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஈ. கே 649 என்ற விமானத்தினூடாக ஜனாதிபதி நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
ஜனாதிபதி டுபாய்க்கு சென்று அங்கிருந்து, மற்றொரு விமானத்தின் ஊடாக பிரித்தானியா நோக்கி பயணிக்கவுள்ளார்.
ப்ரான்ஸுக்கான விஜயத்தின் போது, புதிய பூகோள நிதியுதவி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் ப்ரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் அழைப்பின் பேரில்; இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த மாநாடு எதிர்வரும் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் பாரிஸில் இடம்பெறவுள்ளது.