விமானத்தை கடத்துவது குறித்து தொலைபேசி மூலம் உரையாடிக்கொண்டிருந்த குற்றச்சாட்டில் விமானப் பயணியான ஓர் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியிலிருந்து மும்பை நோக்கி பறக்கவிருந்த விஸ்தாரா எயார்லைன்ஸின் யூகே 996 விமானத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விமானம் புறப்படுவதற்கு முன்னர், தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த மேற்படி இளைஞன், 'ஹைஜாக்' என சத்தமிட்டாரென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால், பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு சோதனையிடப்பட்டதுடன், விமானத்திலும் தேடுதல்கள் நடத்தப்பட்டன. அதன் விமானம் புறப்பட அனுமதி வழங்கப்பட்டது.
இச்சம்பவத்தினால் விமானப் பயணம் 4 மணித்தியாலங்கள் தாமதமடைந்தது. மாலை 6.30 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் இரவு 10.30 மணிக்கே புறப்பட்டுச் சென்றது.
23 வயதான ரித்தேஷ் சஞ்சய்குமார் ஜூனேஜா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளாரென விஸ்தாரா நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விமான ஊழியர்களின் முறைப்பாட்டையடுத்து ரித்தேஷ் கைது செய்யப்பட்டாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.