முட்டை மற்றும் அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்த 3 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மன்னார் நீதி மன்றத்தினால் மூவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகர் பகுதியில் தொடர்ச்சியாக பொருட்கள் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக மன்னார் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைக்க பெற்ற முறைப்பாடு தொடர்பில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வலைப்பின் போதே குறித்த மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நீதி மன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்ட போதே மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி குறித்த மூன்று வர்த்தக நிலைய
உரிமையாளர்களுக்கும் தலா ஒரு இலட்சம் அபராதம் விதித்திருந்தார்.
இந்த நிலையில் முட்டை ஒன்று 44 ரூபாய்க்கு அதிகமாகவும் கீரி சம்பா அரிசி 260 ரூபாவுக்கு அதிகமாக விற்பனை செய்யும் பட்சத்தில் மன்னார் நுகர்வோர் அதிகாரசபையிடம் முறையிடுமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மன்னார் நகர் நிருபர்-