நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு காத்தான்குடிக்கு நேற்று 23ம் திகதி விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தவிசாளர் P. மதன்வாசன் அவர்களும் காத்தான்குடி மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் அவருக்கு புனிதமிக்க குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு அக்ஸா பள்ளி நிர்வாகத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டது.
அனைத்து நிருவாக உறுப்பினர்கள் மற்றும் பள்ளிவாயல் சுற்றுப் பயணக்குழு உறுப்பினர்களின் முழுமையான பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் விஷேட உரை நடாத்தினார்கள்.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், நகர சபை செயலாளர் மற்றும் காத்தான்குடி போலீஸ் பொறுப்பதிகாரி மற்றும் அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் ஊர் பிரமுகர்கள் ஜமாஅத்தார்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.
இறுதியில் எமது புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் வீதி மற்றும் மத்திய வீதி புனர்நிர்மாணம் தொடர்பாக பேசப்பட்டு அதற்கான உடனடி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி தந்து விட்டுச் சென்றார்