கனடாவில் விற்பனையாகும் சிகரெட் பெட்டிகளில் உள்ள ஒவ்வொரு சிகரெட்டிலும் சுகாதார எச்சரிக்கை வாசகங்கள் அச்சிட அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பொது மக்கள் மத்தியில் சிகரெட் பயன்பாட்டை குறைக்கும் வகையில் கனடா அரசாங்கம் விழிப்புணர்வு நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதாவது, ஒவ்வொரு சிகரெட்டிலும் புகையிலையின் புகை குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும், புகையிலை புற்றுநோய் உருவாவதற்கு ஒரு காரணம், ஒவ்வொரு புகைச்சலிலும் விஷம் உள்ளது போன்ற வாசகங்கள் ஆங்கிலம் மற்றும் பிரான்ஸ் மொழிகளில் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கனடாவின் சுகாதார அமைச்சர் ஜீன் யூவ்ஸ் டுக்லோஸ் தெரிவிக்கையில்,
புகையிலை பயன்பாடு கனடாவின் மிக முக்கியமான பொது சுகாதார பிரச்சனைகளில் ஒன்றாக தொடர்கிறது.
இது, நோய் மற்றும் அகால மரணத்தை தடுக்கக்கூடிய நாட்டின் முன்னணி காரணமாகவும் அமைந்துள்ளது.
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில் புகையிலைக்கு எதிராக எச்சரிக்கை வாசக விழிப்புணர்வு திட்டத்தை அறிமுகம் செய்து, உலகின் முதல் நாடாக கனடா திகழ்கிறது என தெரிவித்தார்.