Our Feeds


Saturday, June 3, 2023

News Editor

நீரில் மூழ்கி உயிரிழப்பு


 மஹவெல – ரஜ்ஜம்மத பிரதேசத்தில் உள்ள சுது கங்கையில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி மீட்கப்பட்ட நிலையில் நாலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பாமுல்ல - கிஹிலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை மற்றும் மரணத்திற்கு பின்னரான விசாரணைகளை அடுத்து உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, கல்கிரியாகம - உஸ்ஸான பாலத்திற்கு அருகில் உள்ள ஹவன்வெல்ல ஓயாவில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »