இன்று கொழும்பில் நடத்தப்படவுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொள்ளுப்பிட்டி, கொம்பனித்தெரு மற்றும் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையங்களின் கோரிக்கைக்கு அமையவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.