எவரையும் கைவிடாத வகையில் ''அஸ்வெசும" சமூக நலன்புரி திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன்படி பதிவுசெய்ய முடியாதவர்களுக்கு ஓகஸ்ட் மாதத்தில் மீண்டும் வாய்ப்பளிப்பதற்கும், எழுத்துமூல மேன்முறையீடு மற்றும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க ஜூலை 10ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.