மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோனில் நடைபெறவுள்ள பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களைக் கண்காணிப்பதற்காக இரண்டு இலங்கையர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான திருமதி ரோஹினி மாரசிங்க மற்றும் பிரபல இராஜதந்திரியான வேலுப்பிள்ளை கனநாதன் ஆகிய இருவருமே தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆபிரிக்க நாடு ஒன்றில் தேர்தல் கண்காணிப்புப் பணிக்காக இலங்கையர்கள் இருவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளமை விசேட அம்சம் என சர்வதேச அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
திருமதி ரோஹினி மாரசிங்கவும் இதற்கு முன்னர் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு குழுவில் இணைந்துகொண்டார். கனநாதன் இதற்கு முன்பு கென்யா மற்றும் நைஜீரியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் தேர்தல் பார்வையாளராகப் பணியாற்றினார்.
இதேவேளை, திருமதி ரோஹினி மாரசிங்கவும் அடுத்த வாரம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை ஜோசப் சம்பரையும் சந்திக்க உள்ளார்.