இளம் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் இளைஞனின் வீட்டை சுமார் ஐநூறு பேர் கொண்ட குழு சோதனையிட்டபோது, பொலிஸார் வானத்தில் சுட்டு மிகவும் பிரயத்தனப்பட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் அச்சுவேலி பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இளம் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறி உள்ளூர்வாசிகள் சிலரால் தாக்கப்பட்ட இளைஞனும் மீட்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதலில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவ்விளைஞன் பொலிஸ் பாதுகாப்பில் யாழ் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
நிலைமையைக் கட்டுப்படுத்தச் சென்றபோது, வன்முறையாக நடந்துகொண்ட நபரின் தாக்குதலால் சப்-இன்ஸ்பெக்டரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தெற்கு நீர்வேலி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது சுமார் 500 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்துவதாக பொலிஸ் 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இரவு நடமாடும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழு நிலைமையைக் கட்டுப்படுத்த முற்பட்டுள்ளனர்.
ஆனால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாததால், மற்றொரு சிறப்பு பொலிஸ் குழு அங்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.