இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுமார் 900இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக பாசோர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இரவு 7.00 மணியளவில் ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதாகவும், அதன் சில பெட்டிகள் எதிர் தண்டவாளத்தில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக யஸ்வான்பூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் அந்த வழியாக கீழே விழுந்த ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 100 மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், இந்த விபத்தால் ஆழ்ந்த வருத்தம் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு இந்திய பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.