Our Feeds


Wednesday, June 14, 2023

Anonymous

உலகின் மிகப்பெரிய சிறுநீரகக் கல்லை அகற்றி மருத்துவத் துறையில் உலக சாதனை படைத்தது இலங்கை இராணுவம்!

 



உலகின் மிகப்பெரிய மற்றும் கனமான சிறுநீரகக் கல்லை பாரிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.


2023 ஜூன் முதலாம் திகதியன்று கொழும்பு இராணுவ மருத்துவமனையில் இந்த பாரிய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிறுநீரக மருத்துவர், லெப்டினன்ட் கேணல் கே. சுதர்ஷன் தலைமையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு இராணுவ மருத்துவமனையில் ஜூன் முதலாம் திகதியன்று இராணுவ மருத்துவர்களால் அகற்றப்பட்ட சிறுநீரக்கல் 13.372 செ.மீ நீளமும் 801 கிராம் எடையும் கொண்டது.

தற்போதுள்ள கின்னஸ் உலக சாதனைகளின்படி, உலகில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய சிறுநீரகக் கல் 13 சென்றிமீற்றர், 2004 இல் இந்தியாவிலும், அதிக நிறையான 620 கிராம் சிறுநீரகக்கல் 2008 இல் பாகிஸ்தானிலும் கண்டறியப்பட்டன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »