சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு பிரதான காரணம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் தற்போதுள்ள அச்சிடும் இயந்திரங்களில் போதிய அச்சிடும் திறன் இல்லாததே என அதன் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடும் 5 இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கான பத்திரங்கள் அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது மோட்டார் வாகன போக்குவரத்து துறையிடம் 5 இயந்திரங்கள் இருப்பதாகவும் ஆனால் தேவையை பூர்த்தி செய்ய அவை போதுமானதாக இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அட்டைகள் இல்லாததாலும், போதிய அச்சு இயந்திரங்கள் இல்லாததாலும் வழங்க வேண்டிய 800,000 அட்டைகள் இன்னும் நிலுவையில் உள்ளது எனவும், தற்போது, நாளொன்றுக்கு, 4,000 அட்டைகள் அச்சிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.