பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அமைச்சர்கள் அல்லாதவர்களுக்கு விசேட பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக 5,400 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அறிக்கையொன்றை கோரியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு ஏற்ப தேவையான மாற்றங்களை மேற்கொள்வதாகவும் அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்துள்ளார்.