அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் அதிகரித்துள்ளது.
மத்திய வங்கியின் கூற்றுப்படி, இன்றைய தினம் டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 283.87 ரூபாயாகவும், விற்பனை விலை 297.23 ரூபாயாகவும் உள்ளது.
சுமார் ஒரு வருடத்திற்குப்பிறகு டொலரின் பெறுமதி 300 ரூபாய்க்கும் குறைவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது