Our Feeds


Friday, June 2, 2023

ShortNews Admin

வங்குரோத்து ஆகும் நிலையிலிருந்து தப்பியது அமெரிக்கா - கடன் உச்சவரம்பை இடைநிறுத்த செனட்டும் அனுமதி



அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பை இடைநிறுத்துவத்றகு அந்நாட்டுப் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகியன அங்கீகாரம் அளித்துள்ளன. இதனால் முதல் தடவையாக வங்குரோத்து அடையும் நிலையிலிருந்து அமெரிக்கா தப்பியுள்ளது.


கடன் வாங்குவதற்கு அமெரிக்க அரசுக்கு அனுமதிக்கப்பட்ட 31.38 ட்ரில்லியன் டொலர் கடன்அளவை கடந்த ஜனவரியிலேயே அமெரிக்க அரசு நெருங்கிவிட்டது. அதன்பின் அமெரிக்க அரசு நிதி நெருக்கடிக்களை எதிர்கொண்டு வந்தது. செலவுகளுக்குப் பணம் இல்லாமல் வங்குரோத்து அடையும் நிலையை அமெரிக்க மத்திய அரசு எதிர்கொண்டுவந்தது. 

இந்த உச்சவரம்பை அதிகரிப்பதற்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனுமதி பெறப்பட வேண்டும். 

அமெரிக்க வரலாற்றில் நூற்றுக்கும் அதிகமான தடவைகள் கடன் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், ஜனாதிபதியும் பாராளுமன்றத்தில்  பெரும்பான்மைப் பலம் கொண்ட கட்சியும் வெவ்வேறாக இருக்கும் நிலையில் இழுபறிகள் ஏற்படுவதுண்டு.

தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை குடியரசுக் கட்சியினரைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ளது. 

இதனால், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கர்த்திக்கும் ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்தன. சில நிபந்தனைகளுடன் கடன் உச்சவரம்பை நீக்குவத்றகு மெக்கர்த்தி இணக்கம் தெரிவித்தார். 

எனினும், இதற்கான சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக குடியரசுக் கட்சியின் கடும்போக்கு உறுப்பினர்கள் சிலர் எச்சரித்திருந்தனர்.

ஆனால், இச்சட்டமூலம் பிரதிநிதிகள் சபையில் 314: 117 விகிதத்தில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.  

அதேவேளை ஜனநாயகக் கட்சியினரை பெரும்பான்மையாகக் கொண்ட செனட் சபையில் இச்சட்டமூலம் வியாழக்கிழமை  63: 36 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதன்ப‍டி 2025  ஜனவரி 1 ஆம் திகதி வரை கடன்உச்சவரம்பு இடைநிறுத்தப்பட்டிருக்கும்.

இச்சட்டமமூலம் நிறைவேற்றப்பட்டமை அமெரிக்கர்களுக்கு பெரும் வெற்றி என வர்ணித்துள்ள ஜனாதிபதி ஜோ பைடன், இச்சட்மூலத்தில் இயன்றவரை விரைவாக தான் கையெழுத்திடவுள்ளதாக இன்று தெரிவித்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »