முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனி அரசியலில் ஈடுபடத் தேவையில்லை எனவும் அவர் இப்போதே ஓய்வு பெற வேண்டும் எனவும் அதற்கான நேரம் வந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமர் பதவியை ஏற்கத் தயாரா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவை போன்று நாட்டிற்கு சேவையாற்றிய தலைவர் வேறு எவரும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இன்றும் மஹிந்த ராஜபக்ஷ தான் நாட்டில் மிகவும் பிரபலமான அரசியல்வாதி எனவும் தெரிவித்தார்.
ஆனால் மஹிந்த ராஜபக்ஷ தற்போது ஓய்வு பெற வேண்டிய நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இல்லை எனவும், மக்களின் நலனுக்காக தேவைப்பட்டால் பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து பயணிக்கத் தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.