Our Feeds


Monday, June 12, 2023

Anonymous

ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதையுடன் இராணுவ கிரிக்கெட் வீரர் உள்ளிட்ட மூவர் கைது!

 



சுமார் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருட்களை வைத்திருந்த இராணுவ கிரிக்கெட் வீரர் உள்ளிட்ட மூவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.


கிடைக்கப் பெற்ற தகவலொன்றுக்கு அமைய கொஸ்கொட - கொடகம பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அவர்களிடம் இருந்து சுமார் 24 கிராம் ஹெரோயின் மற்றும் 23 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »