Our Feeds


Saturday, June 3, 2023

Anonymous

ஊடகங்களை ஒடுக்குவதற்கு ஒலிபரப்பு ஆணைக்குழு – ஐநா தலையிடவேண்டும் என வேண்டுகோள்

 



ஒலிபரப்பு ஆணைக்குழு மூலம் ஊடகங்களை ஒடுக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை தடுப்பதற்காக ஐ.நா உடனடியாக தலையிடவேண்டும் என மக்கள் போராட்ட இயக்கத்திற்கான பிரஜைகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.


இலங்கை ஐக்கியநாடுகளின் உறுப்பு நாடு என்பதால் ஐநா குறிப்பிட்ட சட்டமூலம் தொடர்பில் உடனடியாக தலையிடவேண்டு;ம் என வேண்டுகோள் விடுத்துள்ள மக்கள் போராட்ட இயக்கத்திற்கான பிரஜைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் ஜனகபண்டார மக்களின் ஜனநாயகத்தை ஒடுக்குவதற்காக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இந்த சட்டத்தை கொண்டுவரமுயல்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தங்களின்  தகவலிற்கான உரிமையை பயன்படுத்துவதற்கான வழி ஊடகங்கள் மாத்திரமே என தெரிவித்துள்ள அவர் ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் ஜனநாயகத்தை இல்லாமல் செய்ய முயல்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் ஹிட்லர் முசோலினி பொல்பெட் போன்று மாறவிரும்புகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களை ஒடுக்குவதற்கான பொதுவான கொள்கையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முயல்கின்றது சர்வாதிகாரிகள் போல எப்போதும் ஆள முடியாது என்பதை அரசாங்கம் உணரவேண்டும் மக்கள் சர்வாதிகாரிகளை துரத்தியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »