Our Feeds


Saturday, June 24, 2023

ShortNews Admin

சவுதி அரேபியா கட்டியுள்ள கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிக் கட்டிடம்.



சவுதி அரேபியாவின் ஹெக்ராவில் புகழ்பெற்ற பாறைகளில் செதுக்கப்பட்ட கட்டிடக்கலை தளம் உள்ளது. அதனருகில் பாலைவனம் ஒன்றுள்ளது. 


அதில் மராயா என்ற பெயரில் கண்ணுக்கு தெரியாத நவீன கண்ணாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அரபு மொழியில் 'மராயா' என்ற சொல்லுக்கு 'எதிரொளிப்பு' எனப் பொருள்.


இத்தாலிய வடிவமைப்பு நிறுவனமான ஜியோ பார்மா ஸ்டுடியோ மற்றும் பிளாக் இன்ஜினியரிங் ஆகியவற்றின் கூட்டு முயற்சியினால் இந்த நவீன கண்ணாடி கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. 


பாலைவனத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் கண்ணாடி கட்டிடம் அமைப்பது சாதாரணமான காரியம் இல்லை. ஏனெனில் கண்ணாடியின் எதிரொளிப்பால் வீட்டின் உள்ளே வெப்பம் அதிகமாகும்.


மராயா கண்ணாடி கட்டிடத்தின் மேற்கூரை பாலைவனத்தின் காட்சிகளை பார்த்து இரசிக்கும்படி அமைந்துள்ளது. மராயாவில் நட்சத்திர உணவகம், இசை நிகழ்ச்சிகள் என அனைத்து வசதிகளும் உள்ளன.


மராயாவுக்கு வரும் பார்வையாளர்கள் இளஞ்சிவப்பு சூரிய அஸ்தமன ஒளி முதல் மின்னும் விடியல் வரை அனைத்தையும் பார்த்து இரசிக்கின்றனர். 


அது நாளின் ஒவ்வொரு மணித்துளிகளையும் முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக மாற்றுகிறது. சில பார்வையாளர்கள் கட்டிடத்தின் உள்ளே செல்ல தயங்குகிறார்கள். 


எனவே அவர்கள் வெறுமனே மராயாவுடன் புகைப்படங்கள் மட்டும் எடுத்து கொள்கின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »