ஹஜ்ஜுப் பெருநாள் என்பது இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமான சமயப் பண்டிகையாகும். நபிகள் நாயகத்தின் போதனைகளின்படி முஸ்லிம்கள் ஒற்றுமையாக ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள்.
இந்தப் பெருநாளை மனிதநேயத்திற்கும் இறைவனுக்கும் இடையிலான அற்புதமான பிணைப்பை பிரதிபலிக்கும் பெருநாளாகக் கருதலாம். ஹஜ்ஜுப் பெருநாளின் முக்கிய நோக்கம் சமூக இடைவெளி மற்றும் பல்வேறு வேறுபாடுகளைக் குறைத்து சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் நற்பண்பு சிந்தனைகளை உருவாக்குவதாகும்.
சவூதி அரேபியாவின் மக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஹஜ் புனிதப் பயணம், இப்ராஹிம் நபி மற்றும் அவரது மகன் இஸ்மாயில் ஆகியோரின் தியாகத்தை குறிக்கும் நிகழ்வாக ஹஜ் கருதப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் எந்த வேறுபாடும் இன்றி ஒன்று கூடி உலக அமைதிக்கான இறைவனை வழிபடுகின்ற ஒரு சர்வதேச மாநாடாகவும் ஹஜ் புனிதப் பயணத்தைக் கருதலாம். இஸ்லாத்தின் ஐந்து பெரிய கடமைகளில் ஐந்தாவது கடமை ஹஜ் செய்ய வேண்டும். இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் மக்காவுக்குச் சென்று ஹஜ் செய்ய வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் பிரார்த்தனையாகும். அந்தப் பிரார்த்தனை நிறைவேற நானும் பிரார்த்திக்கின்றேன்.
ஹஜ்ஜின் நோக்கங்கள் நனவாகி, இனிய ஈதுல் அல்ஹா பெருநாளாக அமையட்டும்.
மகிழ்ச்சியின்மை மற்றும் இருள் சூழ்ந்த நிலைமை முடிவுக்கு வரட்டும், மகிழ்ச்சியும் சௌபாக்கியமும் உருவாகட்டும்.
சமூக விழுமியங்களை வலுப்படுத்தவும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவும், நற்செயல்களை முன்னுதாரணமாகவும் ஆக்கிய ஆன்மீகப் பண்டிகையான ஹஜ் பங்களிப்புச் செய்கின்றது.
புனித திருக்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கைத் தத்துவத்தைப் பின்பற்றும் இஸ்லாமியர்களாகிய உங்கள் அனைவருக்கும் இந்த ஹஜ் பெருநாள் ஆன்மிக முன்னேற்றத்தின் மகத்தான நாளாக அமையட்டும்.!!
சஜித் பிரேமதாச
எதிர்க்கட்சித் தலைவர்