பிரான்ஸில் வாழும் புலம்பெயர் இலங்கை தமிழர்களை நாட்டிற்கு வருகைத் தருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரகசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
பிரான்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தருணத்தில் அங்கு இடம்பெற்ற சந்திப்பொன்றின்போதே இந்த அழைப்பை அவர் விடுத்துள்ளார்.
“நீங்க வாங்க இலங்கைக்கு” என ரணில் விக்ரமசிங்க தமிழ் மொழியில் அழைப்பு விடுத்துள்ளார்.
“உங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றால், தமிழில் பேசுங்கள். எனக்கு தமிழ் தெரியும்” எனவும் அவர் கூறியுள்ளார்.