நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பஸ் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் தொடர முடிவு செய்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்.
இந்த வருடத்திற்கான வருடாந்த பஸ் கட்டண திருத்தம் தற்போது அவசியம் இல்லை எனவும், இந்த முடிவினை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு (NTC) தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணவீக்கம், ஒரு லிற்றர் டீசல் விலை, பராமரிப்பு செலவுகள் ரயர்கள் விலை மற்றும் இதர உதிரி பாகங்களின் விலை உள்ளிட்ட பல காரணிகளை கணக்கில் கொண்டு ஒவ்வொரு வருடமும் ஜூன் 01 ஆம் திகதி வருடாந்த பஸ் கட்டண திருத்தம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.