கடந்த சில நாட்களாக டொலரின் பெறுமதி அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
147,000 ரூபாயாக இருந்த 22 கரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை தற்போது டொலரின் பெறுமதி அதிகரிப்பால் 155,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், 160,000 ரூபாயாக வீழ்ச்சியடைந்த 24 கரட் தங்கத்தின் விலை 175,000 ரூபாயை நெருங்கியுள்ளதாக தங்க வர்த்தகர்கள் மேலும் கூறியுள்ளனர்.