மேல்மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் சீருடையின் கீழ் வெளிர் நிற நீளமான ஆடையை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண தலைமைச் செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நுளம்புகளால் பரவும் டெங்கு நோயிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய மாகாணங்களிலும் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல டெங்கு மற்றும் கொரோனா தடுப்பு நிபுணர் குழுவில் இந்த யோசனையை முன்வைத்தார்.
இந்த வருடம் இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.