யுனெஸ்கோவால் உலக சர்வதேச நினைவகத்தில் பொறிக்கப்பட்ட 64 புதிய ஆவணப் பாரம்பரியப் பொருட்களின் பட்டியலில் ‘மகாவம்சம்’ நூலும் சேர்க்கப்பட்டுள்ளது.
கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து இலங்கை வரலாற்று தகவல்களை உள்ளடக்கிய உலகின் மிக நீளமான வரலாற்று தகவல்களை கொண்ட நூல்களில் ஒன்றாக மகாவமிசம் கருதப்படுகிறது.
இந்த நூலில் வழங்கப்பட்ட உண்மைகளின் நம்பகத்தன்மை இலங்கையிலும் இந்தியாவிலும் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புத்தர், பேரரசர் அசோகர் மற்றும் உலக மதமாக பௌத்தத்தின் எழுச்சி பற்றிய முக்கியமான தகவல்களைக் கொண்ட தெற்காசியாவில் இது ஒரு முக்கியமான வரலாற்று ஆதாரமாகும்.
இந்த ஆவணம் தென்கிழக்கு ஆசியாவில் பௌத்தத்தை பிரபலப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது மற்றும் இந்திய வரலாற்றில் பேரரசர் அசோகரின் அடையாளத்திற்கு தனித்துவமாக பங்களித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.